W-15 துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தேஷபந்து தொடர்பு குறித்து விசாரிக்க… முன்னாள் அமைச்சர் இரகசிய பொலிஸாரால் அழைக்கப்படுகிறார்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை, திங்கட்கிழமை இரகசிய பொலிஸில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.
வெலிகம W-15 துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பு.
இந்த விசாரணையில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேஷபந்து தென்னக்கோன் விளக்கமறியலில் உள்ள நிலையில், மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு தகவல் தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.