அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைக்கப்படும் – ஜனாதிபதி.

நாட்டின் போக்குவரத்து முறையை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவை ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், மேலும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் கூறினார்.
பேருந்துகள் ஒருங்கிணைந்த கால அட்டவணையின்படி இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட தரம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
உலகில் வளர்ந்த நாடுகளில் இயக்கப்படும் வகையிலான நூறு பேருந்துகள் இந்த ஆண்டுக்குள் கொண்டு வர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அவை பத்து கிலோமீட்டர் சென்றால் முதுகு வலிக்கும் பேருந்துகள் அல்ல என்றார் அவர்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக பெலியத்தையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.