கித்சிறி ராஜபக்க்ஷ பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர், முன்னாள் நகரசபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெமட்டகொட பகுதியில் காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை திட்டி மிரட்டியதாக நேற்று (28) இரவு தெமட்டகொட பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (29) நண்பகல் அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், உடல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.