போலியான இலக்கத்தகடுகள் தயாரித்தவர் கைது!

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு வீதி, சீதுவ பகுதியில் போலியான இலக்கத்தகடுகள் தயாரிக்கும் இடம் ஒன்று இயங்கி வருவதாக வலன மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 2025.03.29 அன்று காலை அந்த இடத்தை சுற்றிவளைத்து சோதனை செய்ததில், போலியான இலக்கத்தகடுகள் தயாரித்தது தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 56 வயதுடைய சியம்பலாகஹவத்த, சீதுவ பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேகநபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 03 இலக்கத்தகடுகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சின்னம் பொறித்த ஸ்டிக்கர் தாள் ஒன்று, குடியரசு சின்னங்கள் 67 பொறித்த ஸ்டிக்கர் தாள் ஒன்று மற்றும் இலக்கத்தகடுகள் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தாள் ஒன்று உட்பட சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலன மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.