கோப் குழுவில் சிக்கிய அதிகாரிகள் : தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது எப்படி என்ற உண்மைகளை கக்கினர்!

கடந்த 26ம் திகதி நடந்த, பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்ய இந்திய மருந்து நிறுவனத்தின் பெயரை பரிந்துரைத்தது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அறிவுறுத்தலின் பேரில் என்று தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவு அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்தபோது இந்த தகவல் வெளியானது.
அந்த மருந்துகளுக்காக செவரிட் நிறுவனத்தை சேர்க்குமாறு செயலாளர் அறிவுறுத்தியதாகவும், செயலாளருக்கு கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சர் , அறிவுறுத்தியதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த சப்ளையர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சருக்கு ஒரு முன்மொழிவு அளித்திருந்தார் என்று சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்தார்.
மருத்துவ வழங்கல் பிரிவில் 151 மருந்துகள் மற்றும் 5278 அறுவை சிகிச்சை உபகரணங்கள் பூஜ்ஜிய நிலையில் இருப்பதாக தகவல் இருந்ததா என்றும் கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷாந்த சமரவீர இங்கு கேள்வி எழுப்பிய போதே இந்த விபரங்கள் வெளியானது.