எவ்வளவு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் அரச வேலை தர முடியாது! – அமைச்சர் லால் காந்தாவின் நேரடி பதில்!

வேலை இல்லாதவர்களுக்கு அரசு வேலை வழங்குவதுதான் நம் நாட்டின் அடிப்படை கொள்கையாக இருந்தது . ஆனால் அது சரியானது அல்ல என்றும், அதனால் அதை தான் ஏற்கவில்லை என்றும் என அமைச்சர் கே.டி. லால் காந்தா வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு தலையிட்டு நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், நாட்டில் வேலை இல்லாததால் தான் அனைவரும் அரசு வேலை கேட்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் எவ்வளவு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் மொத்தமாக யாரையும் அரசு பணியில் சேர்க்க முடியாது என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.