சாமர வெலிக்கட உணவை வேண்டாம் என்கிறார்.. வெளியில் இருந்து சுவையான உணவை கேட்கிறார்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலையின் உணவை நிராகரித்துள்ளார்.
அதன்படி, தனக்கு வெளியில் இருந்து உணவு வர அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
அவர் தற்போது வெலிக்கட ரிமாண்ட் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்ற கைதிகளைப் போலவே பாய், தலையணை, தட்டு மற்றும் கோப்பை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.