மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற சாரணர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு (videos)

மன்னாரில் சாரணர்களின் வருடாந்த பொதுக்கூட்ட ஒன்று கூடல் நிகழ்வு கடந்த (29.03) சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
சாரண சங்கத்தின் மன்னார் மாவட்ட ஆணையாளர் ஸ்ரான்லி டிமெல் லெம்பேட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கடந்த (22.02.2025) இலங்கை முழுவதும் நடைபெற்ற “கிளீன் சிறீலங்கா” செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டப் பேருந்து மற்றும், தொடருந்து நிலையங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்த சாரணர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில், வருடாந்த பொதுக் கூட்டம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் K.கனகேஸ்வரன், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர், ஜனப்றித் பெர்னாண்டோ,மன்னார் மாவட்டச் சாரணர் சங்கத்தின் ஆணையாளர் திரு.ஸ்ரான்லி டிமெல் லெம்பேட், உதவி மாவட்ட ஆணையாளர்கள், இலங்கை சாரணர் சங்கத்தின் மன்னார்க் கிளையின் செயலாளர் வாசுகி சுதாகரன், பொருளாளர் Dr.K.சுதாகரன், மற்றும் சின்னத்துக்கான செயலாளர் S.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டத்தின் நிறைவில் மன்னார் சாந்திபுரம் புகையிரத நிலையத்திற்கு விரைந்து சென்ற சாரணர்கள் “கிளீன் சிறீலங்கா” செயற்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் துப்பரவுப் பணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.