தொப்புள் தெரியும்படி சேலை அணிந்து நீதிமன்றத்தை அவமதித்தாரா? புத்தளம் வழக்கறிஞர் ரிமாண்ட்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், நீதிமன்றத்தில் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவரை ரிமாண்ட் செய்ய புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட உத்தரவிட்டார்.

புத்தளம் உயர் நீதிமன்ற பதிவாளர் இந்த வழக்கறிஞருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை வழக்கறிஞரை ரிமாண்டில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புத்தளம் நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், வழக்கறிஞர் தொப்புள் தெரியும் வகையில் சேலை அணிந்ததால் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நீதிபதி அந்த வழக்கறிஞரை அழைத்து தொப்புள் தெரியும்படி சேலை அணிய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குள் நுழையும்போது தலை வணங்காமல் , வணக்கம் சொல்லாமல் இருந்தது மற்றும் இந்த வழக்கில் பிணை கேட்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதியை மரியாதையுடன் அழைக்காமல் இருந்தது ஆகியவை என நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.