தேர்தலில் பணிபுரிய 2.5 லட்சம் அரசு ஊழியர்கள்?

2025 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளில் சுமார் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் சுமார் 13,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் தலா பத்து அரசு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், வாக்குச்சாவடி பணிகளுக்காக குறைந்தபட்சம் 1 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை வாக்கு எண்ணிக்கை வாக்குச் சாவடிகளிலேயே நடைபெறும். இருப்பினும், சில சிறிய வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப்பெட்டிகள் ஒரு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2025 உள்ளாட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.