உரிமம் இல்லாதவர்களுக்கு டியுசன் வகுப்புகள் நடத்த முடியாது – புதிய விதிகள் இதோ.

அரசாங்கம் தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது முன்மொழியப்பட்ட ஆசிரியர் கவுன்சிலின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக செய்யப்படுகிறது. இது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
அதன்படி, ஆசிரியர் கவுன்சில் மூலம் பதிவு எண் வழங்கப்படும். அவ்வாறு பதிவு செய்யப்படாத ஆசிரியர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
இதன் மூலம் தனியார் பயிற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக முதலில் தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.