வெலிகம ‘W15’ ஹோட்டல் சர்ச்சை: உண்மை என்னவென்று அறிய முன்னாள் அமைச்சர் சி.ஐ.டி.க்கு…

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ‘W15’ ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களைப் பெறுவதற்காக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (திங்கட்கிழமை 31) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தேஷபந்து தென்னக்கோன் தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு மேலும் தகவல்கள் தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு (2024 ஜனவரி 18) ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி முன்னாள் அமைச்சர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.