நான்தான் OIC ஐ மாற்றினேன்.. – கசிப்பு தம்மிக*

பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தான் ஒரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்றியதாகக் கூறியுள்ளார்.
அந்த நபர் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் பிரபலமான “கசிப்பு தம்மிக” என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் என்றும், போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் அவர் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பே அந்த நபருக்குத் தெரிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“கசிப்பு தம்மிக” குறிப்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 29 ஆம் திகதி முதல் குருநாகல் பிரிவில் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.