வரலாற்றில் அதிக பொய் சொன்ன தலைவர் தற்போதைய ஜனாதிபதி – நாமல் ராஜபக்க்ஷ

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல வரும் அரசாங்க அமைச்சர் ஒன்று கூறும்போது, விமானப்படை மற்றொன்று கூறுகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலுக்காக மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவூட்டும் மாத்தறை பம்புரண கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி வரலாற்றில் அதிக பொய் சொன்ன தலைவராக மாறிவிட்டார் என்றார்.

தங்கள் தலைவர்கள் அன்று நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் தொண்டாற்றிய பின்னரே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் இந்த அரசாங்கம் மக்களிடையே பொய்யை பரப்பி ஆட்சிக்கு வந்தது என்று அவர் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

இந்த அரசாங்கத்தின் கபடத்தனம் தெளிவாகத் தெரியும் ஒரு சந்தர்ப்பம், அன்று அதிவேக நெடுஞ்சாலை கட்டும்போது அதற்கு எதிராக விமர்சனம் செய்தது. அப்படி விமர்சனம் செய்தவர்கள் இன்று மாத்தறை கூட்டங்களுக்கு வருவது அன்று எதிர்த்த அதே அதிவேக நெடுஞ்சாலையில் தான்.

முப்பது வருட போரை முடிவுக்கு கொண்டு வர தலைமை தாங்கி கட்டளையிட்டவர் மஹிந்த ராஜபக்ஷ. போரில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், தலைமை தாங்கியவரிடம் கேட்பதற்கு பதிலாக, இன்று தலைவர் சொன்னதை செய்த இராணுவ வீரர்களை தாக்குவதுதான் நடக்கிறது.

கருணா அமைச்சர் அன்று செய்த தவறு எல்.டி.டி.ஈ.யிலிருந்து விலகியதுதான். அன்று எல்.டி.டி.ஈ.யும், ஜே.வி.பி.யும் செய்தவற்றை மறந்துவிட்டு, இன்று இராணுவ வீரர்களை தாக்க முயற்சிக்கிறார்கள்.

நாங்கள் புலம்பவில்லை. எங்களுக்கு வேலை செய்து பழக்கம். சவால்களை எதிர்கொள்ள முடியும். நாங்கள் அப்படி செய்து காட்டியுள்ளோம். வெகு விரைவில் மக்கள் ஆதரவுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம். அதுவரை, மக்கள் ஆதரவுடன் உள்ளவர்களை அனைத்து பிரதேச சபைகளிலும் உருவாக்கத்தான் இந்த முயற்சி.

இவ்வாறு நாமல் ராஜபக்ஷ கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.