தேஷபந்து ராஜினாமா ?

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்யக்கூடும்.
அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு ராஜினாமா செய்வது சிறந்தது என்று அவரது நண்பர்களும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் ராஜினாமா செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேஷபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தால் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு போகம்பறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.