மோடி இலங்கை வரும்போது ஹரினி தாய்லாந்துக்கு

பிரதமர் ஹரினி அமரசூரியா ஆறாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.இக்காலத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் ஹரினி அமரசூரியா பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.