தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளது – தேவானந்த சூரவீர எம்.பி.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களும், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களும் ஆன நிலையில், தங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சூரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, எந்த சந்தேகமும் இல்லாமல் உள்ளாட்சி சபைகளின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும், இந்த தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.
உள்ளுராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.