தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 6 மாதங்களில் 6000 பில்லியன் கடன் பெற்றுள்ளது!

ஒருபோதும் தொழில் அல்லது வியாபாரம் செய்யாமல் மற்றவர்களைச் சார்ந்து வாழும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் இல்லை என்று சர்வஜன பலய அமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரோஷன் ரணசிங்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் சென்று பெருமை பேசும் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என்றும், கடந்த ஆறு மாதங்களாக கடன் வாங்குவதைத் தவிர வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களாக கடன் வாங்கி நாட்டை நடத்தி வருகிறது என்றும், இந்த காலகட்டத்தில் 6000 பில்லியன் ரூபாயை நாடு கடனாக பெற்றுள்ளது என்றும் ரோஷன் ரணசிங்க தெரிவித்தார்.