பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ் சென்றடைந்தார்!

பிரதமர் ஹரினி அமரசூரிய தற்போது பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
“இலங்கையின் அனுராதபுரம் புனித நகரத்தின் உலக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை பாரம்பரியம்” என்ற தலைப்பில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் யுனெஸ்கோ சர்வதேச நிபுணர் மாநாட்டின் அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த மாநாட்டின் போது, பிரதமர் ஹரினி அமரசூரிய, பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிற அதிகாரிகளும் பிரதமருடன் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.