பணத்தை எண்ணியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடைநீக்கம்

கோவையில் இருந்து சேலம் வரை சென்ற அரசுப் பேருந்தில் ரொக்கப் பணத்தை தன் கைகளால் எண்ணியபடியே பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கோவையில் இருந்து சேலம் வரை சென்ற அரசுப் பேருந்தில் அதன் ஓட்டுநர் இத்தகைய செயலில் ஈடுபட்டார்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அவரது பொறுப்பற்ற செயலைப் பலரும் கண்டித்தனர்.
பயணிகளின் பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை காட்டவில்லை என விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
பயணச்சீட்டுக்காக செலுத்தப்பட்ட தொகையை ஓட்டுநர் எண்ணிப் பார்த்தார் என்றும் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகம், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.