மியான்மரில் ஒரு வார துக்க பிரகடனம்

மியான்மரில் ஒரு வார துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலநடுக்கம் காரணமாக இந்த துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மியான்மர் இராணுவ ஆட்சி ஏப்ரல் 6 ஆம் திகதி வரை இந்த துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 28 ஆம் திகதி மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு மேலும் கூறுகையில், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் மருத்துவமனை அமைப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது.
நிலநடுக்கத்தால் மருத்துவமனை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.