இலங்கையில் வயதானவர்களின் தனிமை மற்றும் இளங்கோ ராம் ‘நெலும் குளுண’ (பெரிசு) திரைப்படம் – அசோக ஹந்தகமாவின் பார்வை

இலங்கையில் பெரும்பாலானவர்கள் வயதாகும்போது தனிமைப்படுத்தப்படுகிறார்கள். முன்பு இருந்த சமூக தொடர்புகள் இல்லாமல் தனித்து விடப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற மத ஸ்தலங்களுக்கு செல்கிறார்கள் அல்லது தங்கள் பேரக்குழந்தைகளுடன் சிறுவயதுக்குத் திரும்புகிறார்கள். அவர்களுடன் விளையாடுகிறார்கள், பள்ளிக்கு செல்கிறார்கள், பள்ளி முடியும் வரை வாசலில் காத்திருக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் தங்கள் நாளைக் கழிக்கிறார்கள்.
வாழ்க்கையை அனுபவிக்கும் அத்தியாயம் முடிந்து, வேதனையை அனுபவிக்கும் அத்தியாயத்திற்குள் நுழைகிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையை விட்டுவிடுகிறார்கள். இந்த வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு, அடுத்த வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக அமைத்துக் கொள்வது என்று பார்க்கிறார்கள். இதைப் பற்றி பேசுவது வேதனையான விஷயம்.
கறுப்பு நகைச்சுவை என்பது பொதுவாக வேதனையான அல்லது தீவிரமான விஷயத்தை மிகவும் இலகுவாகவும் நகைச்சுவையாகவும் பேசும் நாடகம், திரைப்படம் அல்லது வேறு கலைப்படைப்பு. “நெலும் குளுண” அப்படிப்பட்ட ஒரு சோகமான விஷயத்தைப் பற்றி பேசும் திரைப்படம்.
இலங்கையில் பெரியவர்கள் பொதுவாக பெரியவர்களுக்கான திரைப்படங்களை பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட திரைப்படங்களை பார்த்தால் தாங்கள் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளும் கெட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் “நெலும் குளுண” நமது சினிமாவில் இருக்கும் இந்த தடையை உடைக்கிறது. அதை பார்க்க பார்வையாளர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டே பெரியவர்களின் விஷயத்தைப் (இறந்தாலும் சுருங்காத விறைப்புத்தன்மை கொண்ட ஆண்குறி) பார்க்கிறார்கள்.
இது மட்டுமே போதும் இந்த திரைப்படம் நமது சினிமாவில் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்க.
மேலதிக இணைப்பு :
இளங்கோ ராம் இயக்கிய பெரிசு திரைப்படம் ….. கதை என்ன?
இரண்டு சகோதரர்கள் அவர்களது தந்தையின் இறப்புக்கு பின்னால், அவரது இறந்த உடலில் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்த மாற்றம் அவரது இறுதி சடங்கில் ஒரு பெரிய பிரணயமாக வெடிக்கும் என்ற நினைத்து பயந்து போன அவர்கள். அதனை மறைத்து அவரது இறுதி சடங்கினை நல்லபடியாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். அவர்களது திட்டம் நல்லபடியாக நடந்து முடிந்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
“நெலும் குளுண” (Tentigo) சிங்கள திரைப்படம் பல்வேறு மொழிகளில் மறு ஆக்கம் (ரீமேக்) செய்யப்பட்டு உள்ளன.
இந்த திரைப்படம் தமிழ் (பெரிசு), தெலுங்கு (Pedha) ஆகிய மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்ட பதிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தி, ஸ்பானிஷ், இத்தாலியன், பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் மொழிகளிலும் மறு ஆக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த மறு ஆக்கங்கள் இலங்கை சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கின்றன.