தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள்.

அரசு சேவையில் 30,000 இளைஞர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு புத்தளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“திறமை மற்றும் தகமை உள்ள புதிய தலைமுறையைச் சேர்ந்த 30,000 பேரை நாங்கள் நியமிக்கிறோம். இப்போது பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறைய பத்திரிகைகளில் விளம்பரங்கள் வருவதை நான் பார்த்தேன். விண்ணப்பங்களைச் சமர்ப்பியுங்கள், நாங்கள் வேலை தருகிறோம்.
அதேபோல், அஸ்வெசும கிடைக்காத ஒரு குழு உள்ளது. அவர்களுக்கு கிடைக்க வேண்டும், ஆனால் கிடைப்பதில்லை. நாங்கள் விண்ணப்பங்களை அழைத்துள்ளோம். இப்போது தேர்வு குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் 4 லட்சம் குடும்பங்களுக்கு புதிய அஸ்வெசும வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், அரசு சேவையில் சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு, அஸ்வெசும உயர்வு எதுவும் இல்லாத சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர். அந்த மக்களுக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சதோசவில் 2500 ரூபாய்க்கு வழங்கப்படும்.”
இந்த நிவாரணங்கள் அனைத்தும் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.