இன்று முதல் முட்டைக்கும் வாட் வரி.

இன்று முதல் முட்டை உற்பத்தியின் வருமானத்திற்கு 18% பொருட்கள் மற்றும் சேவை வரி (வாட்) விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பால் முட்டை விலை உயராது என்று சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அலஹக்கோன் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியின் வருமானத்திற்கு உற்பத்தியாளர்களிடமிருந்து வாட் வரி வசூலிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
இந்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும், தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.