ஜப்பானில் மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயம்: மூன்று லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என தகவல்.

ஜப்பானில் மூன்று லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானிய அரசு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட செய்திகளில், அடுத்த 30 ஆண்டுகளில் ஏற்படக்கூடும் என்று கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எட்டு முதல் ஒன்பது வரை பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 80 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.