போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் இராணுவ மேஜரும், காதலியும் கைது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரும், அவரது காதலி என்று கூறப்படும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுர பொலிஸார் நேற்று (மார்ச் 31) ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணும், முன்னாள் மேஜரும் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.