எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நெருக்கடியில்..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்திற்காக எரிபொருள் நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள முறைமையின்படி, வழங்கப்படும் கமிஷன் தொகையில் எரிபொருள் நிலையங்களை நடத்துவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.

இந்த மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட செலவுகளைச் செலுத்திய பிறகு, அதிக விற்பனை உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாயும், குறைந்த விற்பனை உள்ள எரிபொருள் நிலையத்திற்கு அதற்கும் குறைவான லாபமும் கிடைக்கும் நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

சுமார் 25 பேர்ச்சஸ் நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் எரிபொருள் நிலையத்திற்கு மிகக் குறைந்த லாபம் கிடைத்தால், எரிபொருள் நிலையங்களை நடத்துவது சிக்கலாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

இது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் முயற்சி அல்ல என்றும், தற்போது எண்ணெய் விநியோகஸ்தர்கள் புதிய யோசனைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளனர் என்றும், நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருவதாகவும் சந்தநாயக்க மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.