பேருந்து கட்டணம் உயர்வு: ஏற்கனவே மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது – கெமுனு விஜேசூரிய.

இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அது நடைபெறவில்லை என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேசூரிய கூறுகையில், இதனால் வரவிருக்கும் பேருந்து கட்டண திருத்தத்தில் கட்டாயம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்றார்.
ஏற்கனவே பேருந்துகள் மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயக்கப்படுவதாகவும், கூடுதலாக அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி விகிதங்களின் கீழ் பேருந்துகளின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், வாட் வரியும் பேருந்துகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதால் கட்டாயம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.