உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை நாளை (02) வரை இடைநிறுத்தும்படி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுக்களை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கொழும்பு மாநகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சர்வஜன பலய, சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.