அகில விராஜுக்கு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பதவி !

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஏப்ரல் 01) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
அகில விராஜ் காரியவசம் இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.