முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்…

முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கியதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த முன்னாள் இராசாங்க அமைச்சர் நேற்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்தனர். அதன்படி கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.