பணத்துக்கு முன் சகோதரத்துவம் சாகடிக்கப்பட்டது!

நேற்று (01) ஜா-ஏல பொலிஸ் பிரிவின் ஏகல புனித மத்தேயு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணப் பிரச்சனை காரணமாக இரு சகோதரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் இளைய சகோதரரை தாக்கி கொலை செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் புனித மத்தேயு மாவத்தை, ஏகல பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார். கொலை செய்ததாக அவரது சகோதரரான ஏகல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஜா-ஏல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.