நால்வர் மீதான பிரிட்டனின் தடை பற்றி ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்! – அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு.

சவேந்திர சில்வா உள்ளிட்ட மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகிய 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
……….