மற்றொரு சிறப்பு விசாரணை ஆரம்பம்! 22 நபர்கள் தொடர்பில் விசாரணை!!

ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் B அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் 22 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்களில் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.