ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்திர மாநாடு இன்று கொழும்பில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்திர மாநாடு இன்று (ஏப்ரல் 03) பிற்பகல் 01.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெறுகிறது.
“தொலைதூரம் பார்ப்போம் – அணிவகுப்போம் – எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
ஐக்கிய இளைஞர் சக்தி, ஐக்கிய மகளிர் சக்தி, ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி உள்ளிட்ட கட்சி சார்ந்த அமைப்புகள் மற்றும் கிளை சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரப்பூர்வமாக 2020 மார்ச் 02 ஆம் தேதி தொடங்கப்பட்டது.