உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைவரை ஒத்திவைப்பு

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக தற்போது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சித் அமைப்புகளின் தேர்தல் நடவடிக்கைகளை நாளை (ஏப்ரல் 3) வரை நிறுத்தி வைக்குமாறு மேல் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களில் பிறப்புச் சான்றிதழ்களின் அசல் பிரதிகளை சமர்ப்பித்த வேட்புமனுக்களை , மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக கொழும்பு மாநகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சர்வஜன பலய, சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.