போருக்குத் தயார் நிலையில் ஜப்பான்

ஜப்பான் அண்மைக் காலமாகத் தனது தற்காப்பு கட்டமைப்பைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஓக்கினாவாவில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தைக் கூட்டு நடவடிக்கையாக ஜப்பான் ராணுவம் மேற்கொள்கிறது.
ஜப்பான் ஏற்கெனவே தனது நாட்டிற்குள் வான்வழியாக வரும் ஏவுகணைகள்மீது தாக்குதல் நடத்த ஆங்காங்கே தளங்கள் அமைத்துள்ளது. அவை தெற்கு-மேற்குப் பகுதிகளில் உள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கையாக தோக்கியோவில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள யோனாகுனியில் ஏவுகணை தளத்தை அமைக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. அந்தத் தளம் தைவானிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மேலும் ஜப்பான் அரசாங்கம் கியூசு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஏவுகணை தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தளங்கள் வடகொரியா மற்றும் சீனாவின் முக்கிய நகரான ஷாங்காய் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் உள்ளது.