தென்னக்கோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்க்படப்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை – வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்தரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்துத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…………

Leave A Reply

Your email address will not be published.