சன்ரைசர்ஸ் அணியை கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

கொல்கத்தாவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் ரஹானே 38 ரன்களும், இளம் வீரர் ஆங்கிரிஸ் ரகுவன்ஷி 32 பந்துகளில் அரை சதமும் அடித்தனர். இறுதியில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதேபோன்று 17 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணி 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கியது.
இந்த ஸ்கோர் எல்லாம் எங்கள் அணி 15வது ஓவரிலே எட்டிவிடும் என்ற இறுமாப்புடன் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தலா இரண்டு ரன்கள் வெளியேற நிதீஷ்குமார் ரெட்டி 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 44 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கமெண்டி மெண்டீஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். கமிண்டூ மெண்டீஸ் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஹென்றிச் கிளாசன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய மற்ற சன்ரைசர்ஸ் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி திரும்பினார்.
பேட் கம்மின்ஸ் 14 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவரில் எல்லாம் 120 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி, நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று வைபோவ் அரோரா, நான்கு ஓவரில் 29 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.