ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் 14 வயது சிறுவன் பாதல். இந்த சிறுவன் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ராஜ்கோட் பகுதி தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

அப்போது, அதே நேரத்தில் அவ்வழியாக சென்ற வேராவல்-பாந்த்ரா ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் போத்தலை வெளியில் வீசினார்.

அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியதில் காயம் ஏற்பட்டு நிலை குலைந்து கீழே விழுந்தார்.

பின்னர், சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.

ஆரம்பத்தில் சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பயணி வீசிய தண்ணீர் போத்தல் தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது கனமான பொருள் இதயத்தின் மீது தாக்குவதால் காயம் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.

மேலும், போத்தலை வீசிய பயணியின் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.