சிக்கலில் நாமல்! – சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முறைகேடான வகையில் பரீட்சைக்குத் தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர்.
இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின்போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
இதனைக் கருத்தில்கொண்ட கொழும்பு நீதிவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
………