மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடம்.

சமூக சேவைகள் தினணக்களத்தால் நடத்தப்பட்ட 2025 ஆண்டுக்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத்திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி நேற்று மஹிந்த ராஜபக்க்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் 6 தங்கப் பதக்கங்களையும், 10 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.