பழங்குடியினரை ஏமாற்றி அமேசான் வனப் பகுதியை வாங்கியதாக நித்தியானந்தா சீடர்கள் கைது!

கைலாசா நாட்டை உருவாக்குவதற்காக பழங்குடியினரை ஏமாற்றி அமேசான் வனப் பகுதியை வாங்கியதாக நித்தியானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரையும் இந்தியா, சீனா உள்ளிட்ட அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய பொலிவியா அரசு, உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினரிடம் ஒப்பந்தம்
பொலிவியா நாட்டுக்குச் சென்ற நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர், பெளரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர் பெட்ரோ குவாசிகோவை அந்நாட்டு எல்லைக்குட்பட்ட அமேசான் வனப் பகுதியை வாங்க பழங்குடியினரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாகவும் இலவச மருத்துவம் தருவதாகவும் வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும் ஆசைவார்த்தைக் கூறி, பெளரி பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனப்பகுதியை 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதற்காக ஆண்டுக்கு இலங்கை மதிப்பில் 05 கோடி கொடுப்பதாக நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிவியா நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அந்நாட்டு அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக கைலாசாவில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த 20 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும், 20 பேரையும் அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.