ஹர்திக் பாண்டியா பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்த ஐபிஎல் கேப்டனும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார். அனில் கும்ப்ளேவின் பந்து வீச்சு சாதனையையும் உடைத்து இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு கேப்டனும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. அனில் கும்ப்ளே இரண்டு முறை 16 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதுவே இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை ஹர்திக் பாண்டியா முறியடித்து இருக்கிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் இரண்டாவது இடத்தை சமன் செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இந்த பட்டியலில் ஷேன் வார்னே 57 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்திக் பாண்டியா 30 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இது மட்டும் இன்றி ஹர்திக் பாண்டியா மற்றொரு சாதனையும் செய்திருக்கிறார். கேப்டனாக இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையையும் செய்திருக்கிறார்.