ஜனாதிபதி அலுலகத்தில் மோடிக்கு சிறப்பு வரவேற்பு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.