இந்திய-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிராக கோட்டையில் ஆர்ப்பாட்டம்.. ‘இக்கணத்திலிருந்து போர் பிரகடனம்’ – வீதியில் இறங்கிய முன்னிலை சோசலிசக் கட்சி.

முன்னிலை சோசலிசக் கட்சியினர் தற்போது கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் 1987 ஆம் ஆண்டைப் போன்று நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ ஆர்ப்பாட்டக்காரர்களை உரையாற்றும் போது, இந்த காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி இக்கணத்திலிருந்து போர் பிரகடனம் செய்வதாக தெரிவித்தார்.