‘என் நண்பர் அனுரவுடன் அனுராதபுரத்தில்..’ சமூக வலைத்தளத்தில் மோடியின் பதிவு : அனுர மோடியின் வாகனத்தில்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் செய்தார்.
அவரது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாள் திட்டத்தின்படி இது அமைந்துள்ளது.
விமான மூலம் அனுராதபுரத்திற்கு வந்த அவரை அனுராதபுரத்தில் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் ஜெய ஸ்ரீ மகா போதியை தரிசிக்கச் செல்லும் போது தனது சமூக வலைத்தள கணக்கில் புகைப்படமொன்றை மோடி பதிவிட்டு சிங்களத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“எனது நண்பன் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் , அனுராதபுரத்தில் ….”