NPP பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயசேகர காலமானார்!

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.

பிரதேசத்தில் கட்சி, பாகுபாடு இன்றி நல்ல மனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த இளம் அரசியல் தலைவர் மரணமடையும் போது 38 வயதில் இருந்தார்.

அவிசாவெல்லவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மறைவு குறித்து முகநூலில் இன மத கட்சிகளை தாண்டிய பல பதிவுகள் காணப்படுகின்றன.

ஜனித் ஜயசிங்க இவ்வாறு எழுதியிருந்தார்: “கடந்த சில மாதங்களாக COPE குழுவை பார்த்திருந்தால் அவரை அடிக்கடி பார்த்திருக்கலாம். ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த சகோதரர். கேகாலையின் மிகவும் பிரபலமான இளம் தலைவர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேகாலையில் இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர். தனது வாழ்க்கையை நாட்டிற்கும் மக்களுக்கும் அர்ப்பணித்தவர்கள் இறக்கும்போது வருத்தமாக இருக்கிறது.”

பிரதேசத்தில் கட்சி, பாகுபாடு இன்றி நல்ல மனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த இளம் அரசியல் தலைவர் மரணமடையும் போது 38 இள வயதில் இருந்தார்.

மற்றொரு பதிவில் இவ்வாறு இருந்தது:

“நம்ம ஆளு, ஊர் ஆளு, அரசியலுக்கு அப்பாற்பட்ட சகோதரன். நல்ல பயணம் தம்பி. உன் போராட்டத்திற்கு எங்கள் வணக்கம்.” என்று மலீந்திர ஜயவர்தன எழுதியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.