இலங்கைக்கு வரி விதிக்க மாட்டோம் என ஜூலி சங் எங்களை ஏமாற்றிவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்த பின்னர், இலங்கையின் பிரபல அமைச்சர் ஒருவர் இலங்கையின் அமெரிக்க தூதர் ஜூலி சங்கை சந்தித்துள்ளார்.
அப்போது தூதர், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தூதரின் பேச்சை பொய்யாக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி வரி விதித்தது குறித்து அமைச்சர் கூறுகையில், ஜூலி சங் எங்களுக்கு இத்துபோன கயிறு வாக்குறுதியை அளித்துவிட்டார் என்றார்.