மோடிக்கு சஜித் வழங்கிய சிறப்பு பரிசு Eye-One.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று முன்தினமான 5ம் திகதி கொழும்பில் நடைபெற்ற போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச சிறுத்தை புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
நரேந்திர மோடிக்கு , சஜித் பிரேமதாச பரிசாக கொடுத்த சிறுத்தை புகைப்படம் அவர் காடுகளில் திரியும் போது எடுத்த புகைப்படமாகும். சஜித் பிரேமதாசவின் பொழுது போக்குகளில் காடுகளில் திரிவதும் , படம் பிடிப்பதும் ஒன்றாகும்.
கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெட்ரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.
எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை என்றும், அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.